/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
ADDED : ஜன 29, 2024 12:38 AM
கோவை;தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம், டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் நடந்தது.
டிட்டோ-ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாசு கூறுகையில், ''தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடை ஏற்படுத்தும் வகையில், அரசாணை 243 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடும் முன், தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து பெறவில்லை. இதை திரும்ப பெற்று, பழைய நடைமுறைப்படி, பதவி உயர்வு கொண்டுவர வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைவதோடு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
எமிஸ் இணையதள பணிகள் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்தல், உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு செவிசாய்க்காவிடில், விரைவில் அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்,'' என்றார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.