/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு
/
வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு
வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு
வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு
ADDED : டிச 11, 2025 06:46 AM
அன்னூர்: 'ஜாக்டோ- - ஜியோ' அமைப்பு சார்பில், வரும் 13ம் தேதி கோவை, சிவானந்தா காலனியில், உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழக முதல்வரின், 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வேண்டும்.
2003ம் ஆண்டுக்குப் பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கு, பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதம் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை எண், 243 ஐ ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறை துாய்மை பணியாளர்கள் ஆகியோரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு, 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை, சிவானந்தா காலனியில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 60க்கு மேற்பட்ட சங்கங்களின் ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

