/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கால் அச்சம்
/
அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கால் அச்சம்
ADDED : நவ 06, 2024 09:57 PM

பொள்ளாச்சி; நெகமம் அருகே, செட்டியக்காபாளையம் கிழக்கு பகுதியில், கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த 'பிட்டிங்' அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.
நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில் வாகனங்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, சாலையோர தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வப்போது, பழுது ஏற்பட்டால் அதற்கேற்ப சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப் படுகிறது. இந்நிலையில், செட்டியக்காபாளையம் கிழக்கு பகுதியில், ஒரு கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த 'இரும்பு பிட்டிங்' அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. பலத்த காற்று வீசும்போது, அவ்வழியாக செல்வோரின் தலையில் விழும் வாய்ப்புள்ளதால், மக்கள் அச்சமடைகினறனர். மக்கள் கூறுகையில், 'சில பகுதிகளில், சாலை ஓரத்தில் உள்ள ராட்சத மரங்களுக்கு நடுவே, விளக்குகள் மறைந்துள்ளன.
இதனால், சாலையில் சரியாக வெளிச்சம் தெரிவதில்லை. செட்டியாக்காபாளையத்தில், கம்பத்தில் இருந்த மின் விளக்கு உடைந்து, அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. மின் கம்பி பிணைப்பில் தொங்கும் விளக்கு விழுந்தால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மின் விளக்கை அகற்றி, புதிதாக பொருத்த வேண்டும்,' என்றனர்.