/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாழ்வான மின் கம்பியால் அச்சம்: மாற்றியமைக்க கோரி மனு
/
தாழ்வான மின் கம்பியால் அச்சம்: மாற்றியமைக்க கோரி மனு
தாழ்வான மின் கம்பியால் அச்சம்: மாற்றியமைக்க கோரி மனு
தாழ்வான மின் கம்பியால் அச்சம்: மாற்றியமைக்க கோரி மனு
ADDED : பிப் 16, 2024 12:06 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த, கெடிமேடு முதல் எரிசனம்பட்டி செல்லும் ரோட்டில், தாழ்வாக உள்ள மின்கம்பிகளை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம், கோவை கலெக்டர் கிராந்திகுமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி - உடுமலை நான்கு வழிச்சாலையில் இருந்து, தெற்கே பிரிந்து செல்லும் கெடிமேடு முதல் எரிசினம்பட்டி வரையிலான ரோடு, தற்போது அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கூளநாயக்கன்பட்டிக்கு தெற்கு திசையில், ஒரு பாலம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த பாலத்தின் மேற்புறம், மிக தாழ்வாக மின்கம்பிகள் கடந்து செல்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் கூட பயணம் செய்ய முடிவதில்லை. மின்கம்பி உரசினால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வழித்தடத்தில் வாகனங்களை இயக்க முடியாத நிலையில், -அனைவரும், கடந்த 6- மாதங்களாக, 5 கி.மீ., துாரம் சுற்றிச் செல்கின்றனர். அதிகப்படியான கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், கிராமச் சாலையும் சேதமடைந்து விட்டன.
பாலத்தை கடக்கும் தாழ்வான மின் கம்பியை மாற்றி அமைக்காததற்கு, நெடுஞ்சாலைத்துறையால் மின்வாரியத்திற்கு உரிய கட்டணம் செலுத்தாததே காரணமாகும்.
இவ்வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் இருப்பதுடன், திருமூர்த்திமலை செல்வதற்கான முக்கிய இணைப்பு சாலையாகவும் உள்ளதால், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.