/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் அச்சம்
/
ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் அச்சம்
ADDED : பிப் 16, 2024 11:40 PM
ஆனைமலை;ஆனைமலை அருகே, தம்பம்பதியில் காட்டு யானை நடமாட்டத்தால், பொதுமக்கள், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆனைமலை அருகே, தம்பம்பதியில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். வனப்பகுதியையொட்டி உள்ள இப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
மின்வேலியை உடைத்து விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை புகுந்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒற்றை யானை நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக வனத்தில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறி விளைநிலங்களுக்குள் வருகிறது. மின்வேலி உள்ளிட்டவை சேதப்படுத்தியுள்ளது. ஒற்றை யானை என்பதால், அச்சமாக உள்ளது.
ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து, மக்களுக்கும், விளைநிலங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனத்துக்குள் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.