/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'திதி போஜன்' திட்டத்தில் மாணவர்களுக்கு விருந்து
/
'திதி போஜன்' திட்டத்தில் மாணவர்களுக்கு விருந்து
ADDED : அக் 30, 2025 12:29 AM

தொண்டாமுத்துார்: மத்திய அரசின் 'திதி போஜன்' திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், சமூக பங்களிப்புடன் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு தினங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அக்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருவதால், தொண்டாமுத்துார் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு நேற்று மதியம் ஊட்டச்சத்து நிறைந்த அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாழை இலையில் இனிப்பு, வடை, பாயாசம், சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொறியல், கூட்டு என, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் உட்கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் உணவுகளை பரிமாறினர்.

