/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று உலக சிக்கன நாள்: சேமிப்பு கணக்கு துவக்கலாமே!
/
இன்று உலக சிக்கன நாள்: சேமிப்பு கணக்கு துவக்கலாமே!
இன்று உலக சிக்கன நாள்: சேமிப்பு கணக்கு துவக்கலாமே!
இன்று உலக சிக்கன நாள்: சேமிப்பு கணக்கு துவக்கலாமே!
ADDED : அக் 30, 2025 12:29 AM
கோவை: உலக சிக்கன நாளான இன்று, தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அக். 30ல் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. நமது வருமானத்தின் முதல் செலவு, சேமிப்பாக இருக்க வேண்டும். வரவுக்குள் செலவுகளை கட்டுப்படுத்துவதன் வாயிலாக, சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது; இது சேமிப்பாக திகழ்கிறது.
சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எதிர்பாராத நிதி நெருக்கடிகள் மற்றும் இன்றியமையாத காலங்களில், நிதி சார்ந்து பாதுகாப்பாக இருக்க சிக்கனமும் சேமிப்பும் உதவுகின்றன.
வாழ்க்கை சிறப்பாக அமைய, அனைவரும் சிக்கனமாக செலவு செய்து சேமித்திட, குறிப்பிட்ட தொகையை சிறு சேமிப்பாக, உலக சிக்கன நாளான 30ம் தேதி (இன்று), அருகிலுள்ள தபால் நிலையங்களில் சேமிப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு துவக்கி, வருங்காலத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும், என, கோவை தபால் கோட்ட கண் காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

