நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் கூத்தாமண்டி, மூலையூரையொட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சுமார் ௪௦ வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை அப்பகுதி விவசாயிகள் பார்த்து, சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமுகை வனச்சரகர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் பெண் யானை உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. பெண் யானையின் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில், உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பெண் யானை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.----