/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
/
ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 06, 2025 05:52 AM
பெ.நா.பாளையம்; கோவை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் மற்றும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் இணைந்து துடியலூர் அருகே பன்னிமடை கிராம விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான முன்னேற்பாடுகளையும், மத்திய அரசின் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்தும், செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி இஷபில்லா அகர்வால் பருத்தி நடவு தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சகாதேவன், மத்திய அரசின் விவசாய திட்டங்கள் குறித்து விளக்கினார். இப்கோ மேலாளர் மாரியப்பன், விவசாயத்தில் நானோ உரங்கள் பயன்பாடு மற்றும் ட்ரோன் வாயிலாக நானோ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது பற்றியும் விளக்கினார். மேலும், ட்ரோன் குறித்து பேசுகையில், ட்ரோன் வாயிலாக, 5 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நானோ உரங்களை தெளிக்கலாம். 10 லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு போதுமானது.
ஒரு ஏக்கருக்கு ரூபாய், 400 மட்டுமே செலவாகும். இதனால் விவசாயிகள் தங்களின் உர செலவு, வேலை ஆட்கள் செலவை குறைப்பதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்றார்.
நிகழ்ச்சியில், ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.