/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்சரா அகாடமியில் கலைவிழா உற்சாகம்
/
அக்சரா அகாடமியில் கலைவிழா உற்சாகம்
ADDED : ஜன 08, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சோமையம்பாளையம், அக்சரா அகாடமியில், மழலையர் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அக்சரா உற்சவம் என்ற பெயரில், கலை விழா நடந்தது. இதில், ஆடல், பாடல், பலகுரல், தனிமனித நடிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். பெற்றோர்களும் உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவி வைஷ்ணவிபாய்க்கு, 'கலாதிலகம்' பட்டம் வழங்கப்பட்டது. பள்ளி யின் நிறுவனர் கிரீசன், செயலாளர் ஹனி, முதல்வர் பிரமிளா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

