/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூமாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
/
பூமாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 24, 2024 01:00 AM
வால்பாறை:வால்பாறை, நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன். இங்குள்ள பூமாரியம்மன் கோவிலின், 64ம் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் மேலாளர் கணேஷ்பாபு ஏற்றி வைத்தார்.
விழாவில், வரும், 29ம் தேதி இரவு கும்பம்பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு முளைப்பாரி எடுத்து, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 6ம் தேதி வரை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

