/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவிழாக்கள் ஏராளம்; மேளத்துக்கு கிராக்கி
/
திருவிழாக்கள் ஏராளம்; மேளத்துக்கு கிராக்கி
ADDED : ஏப் 15, 2025 08:33 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராம கோவில்களில், சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்று மாதங்களில், திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவிளக்கு, முளைப்பாரிகை ஊர்வலம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒரே நேரத்தில், பல கிராமங்களில், கோவில் விழாக்கள் நடப்பதால், முக்கிய அம்சங்களான மைக்செட், மேளங்கள், பந்தல் அமைப்புகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் கூறுகையில், 'பல கிராமங்களில் ஒரே நேரத்தில், கோவில் விழா நடத்தப்படுகிறது. இதனால், மைக்செட், மேளம், பந்தல் அமைக்க கூடுதல் தொகை வழங்க முன்வந்தாலும், கிராக்கி ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

