/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல், சோர்வு, வாந்தி, உடல் அசதி இருக்கா! உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறணும்
/
காய்ச்சல், சோர்வு, வாந்தி, உடல் அசதி இருக்கா! உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறணும்
காய்ச்சல், சோர்வு, வாந்தி, உடல் அசதி இருக்கா! உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறணும்
காய்ச்சல், சோர்வு, வாந்தி, உடல் அசதி இருக்கா! உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறணும்
ADDED : செப் 20, 2024 10:13 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, இருப்பிட மருத்துவர் அலுவலர் டாக்டர் மாரிமுத்து, நோய் தடுப்புத்துறை டாக்டர் சிந்துஜா ஆகியோர் தலைமையில், அவசரப் பகுதியில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:
மாறுபட்ட கொரோனா, மாறுபட்ட சிக்குன்-குனியா, டெங்கு காய்ச்சல், குரங்கு அம்மை, நிபா வைரஸ் போன்ற நோய்கள் பரவி வருவதால் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், செவிலியர், ஊழியர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும்; சோப்பு கொண்டு கை கழுவுவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது.
கடந்த, 17ம் தேதி முதல் நோயாளிகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் அதற்கு உண்டான உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம், பாதுகாப்பாக சிகிச்சை மேற்கொள்வது, நோயாளியிடம் இருந்து நோய் பரவாமல் தடுப்பது குறித்து விளக்கப்பட்டது.
இதற்கு, அனைவரும்முகக்கவசம் அணிய வேண்டியதின் அவசியம், சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்றும் கூறப்பட்டது.
மெடிக்கல் ஷாப்பில், டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வாங்கி சாப்பிடுவது; ஊசி போட்டுக் கொள்ளக்கூடாது தவறு. நோய் பாதிப்பு இருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனைக்கு வந்து டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். நோய் அதிகமான பின் மருத்துவமனைக்கு வந்தாலும், மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடியாமல் போகும் என்பது குறித்து நோயாளிகளிடமும், அவர்கள் உறவினர்களிடமும் அறிவுறுத்தப்பட்டது.
அதிக காய்ச்சல், உடல் சோர்வு, சாப்பிட முடியாமல் இருப்பது, வாந்தி, உடல் அசதி போன்றவை இருந்தால், மருத்துவமனைக்கு வந்து டாக்டர் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்; வீட்டிற்கு அருகில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை வெளியேற்ற வேண்டும். கொசு வளராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.