UPDATED : நவ 18, 2026 06:54 PM
ADDED : நவ 18, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரமடை, மேட்டுப்பாளையத்தில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
‘காய்ச்சல் தொடர்பாக தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல் அடிப்படையில் நோயாளிகளின் இருப்பிட பகுதிகளுக்கு சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை செய்கிறோம். தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன’ என்று காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
