/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கள ஆய்வு
/
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கள ஆய்வு
ADDED : செப் 30, 2024 11:25 PM
சூலுார் : பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோள பயிர்கள், 2 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேவை அதிகரித்துள்ளதால், சாகுபடி பரப்பும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்நிலையில், இயற்கை இடர்பாடுகளால், சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது
காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். போகம்பட்டி கிராமத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரிப் பருவத்திற்கான பயிர் அறுவடை பரிசோதனை திடல் நடந்தது. இதில், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் கோபிநாத், காப்பீடு திட்ட அலுவலர் தேவ கிருஷ்ணன், மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.