/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
97வது வாரமாக ஆவாரம் குளத்தில் களப்பணி; நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

ADDED : ஜன 24, 2025 10:53 PM

அன்னுார்; 97 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளம் சீரமைப்புக்கு, அரசு நிதியை தன்னார்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்னுார்-கோவை ரோட்டில், எல்லப்பாளையம் பிரிவில், 97 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு தெலுங்குபாளையம், எல்லப்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை நீர் வருகிறது.
இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில் பல நூறு ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கவுசிகா நீர் கரங்கள் மற்றும் ஆவாரம் குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று களப்பணி நடைபெறுகிறது. கடந்த வாரம் 97வது வாரமாக களப்பணி நடந்தது.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,' குளத்தில் புதிதாக 1.5 கி. மீ., தூரத்திற்கு கரை அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 800 மீட்டர் தூரத்திற்கு கரை சீரமைக்கப்பட்டுள்ளது. 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன.  எனினும் குளத்திற்கு பல்வேறு பாதைகளில் மழை நீர் வரும் வழியில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும். குளத்தில் முழுமையாக கரைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.இதற்கு அரசு நிதி ஒதுக்கினால் இந்த குளம் ஒரு மாதிரி குளமாக திகழும்,' என்றனர்.