/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பெரியகுளத்தில் தொடரும் களப்பணி
/
பேரூர் பெரியகுளத்தில் தொடரும் களப்பணி
ADDED : ஏப் 28, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில் தன்னார்வலர்கள், தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த களப்பணி செய்து வருகின்றனர்.
கோவை பேரூர் பெரியகுளத்தில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பெரியகுளத்தின் அருகிலும், உட்புறத்திலும் தேங்கி கிடந்த நெகிழி மற்றும் கழிவுகளை தன்னார்வலர்கள் அகற்றினர்.
---அடர்வன வளர்ச்சிக்காக இருந்த மரங்களை பராமரித்து, புதிதாக வளர்ந்து வரும் செடிகளை பாதுகாக்கும் பணிகளும் நடைபெற்றது.
இந்த வெயில் காலத்தில், பறவைகள் மற்றும் சிறிய உயிரினங்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் என்பதை உணர்ந்து, மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் கிண்ணங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன.

