/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வெற்றிக்கு களப்பணி; ஜெ.,பேரவை கூட்டத்தில் முடிவு
/
தேர்தல் வெற்றிக்கு களப்பணி; ஜெ.,பேரவை கூட்டத்தில் முடிவு
தேர்தல் வெற்றிக்கு களப்பணி; ஜெ.,பேரவை கூட்டத்தில் முடிவு
தேர்தல் வெற்றிக்கு களப்பணி; ஜெ.,பேரவை கூட்டத்தில் முடிவு
ADDED : அக் 10, 2025 10:27 PM

பொள்ளாச்சி; கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் நடந்தது. மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சிங் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி முயற்சியில் கடந்த, 2020ம் ஆண்டு முன்னாள் முதல்வர் பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்ட, அவினாசி ரோடு மேம்பால பணிகள், 50 சதவீதம் நிறைவு பெற்றது. கோவையின் அடையாளமாக தென்மாநிலத்தில் மிக நீளமான மேம்பாலம் தந்த முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
எதிர்கட்சி தலைவர் பழனிசாமி எழுச்சி பயணம் வெற்றி பெற்று சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர, தெற்கு மாவட்ட ஜெ. பேரவை கள பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் திண்ணை பிரசாரம், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தந்த முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது, 520 வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதற்கு கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.