/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சாதனை சிலம்ப நிகழ்வு துவக்கம்
/
உலக சாதனை சிலம்ப நிகழ்வு துவக்கம்
ADDED : அக் 10, 2025 10:27 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, 50 மணி நேரம் தொடர்ந்து சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியின், 50வது பொன்விழா ஆண்டையொட்டி, சோழன் உலகசாதனை புத்தகத்துக்கான, 50 மணி நேர சிலம்ப போட்டி நேற்று துவங்கியது. நகராட்சி தலைவர் சியாமளா, பள்ளி அருட்தந்தையர்கள், சோழன் உலக சாதனை புத்தக நிர்வாகிகள் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர்.
சிலம்ப பயிற்சியாளர் ஜெகதீஷ்வரன், உதவி பயிற்சியாளர் தேவேந்திரன் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
சிலம்ப பயிற்சியாளர் கூறுகையில், 'சிலம்பம் சுற்றுதல், 50 மணி நேரம், 50 நிமிடம், 50 வினாடியில், 222 பேர் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழுவினர் வீதம், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இடைமாற்று முறையில் இந்த நிகழ்வு நடக்கிறது. சனிக்கிழமை மாலை, 5:00 மணிக்கு நிறைவு பெறும்.
இளம் தலைமுறையிடம் சிலம்பத்தின் முக்கியத்துவம், தற்காப்பு கலை கற்பதன் அவசியம், உடற்பயிற்சியை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது,' என்றார்.