தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'களப்பணியை தொய்வின்றி தொடர வேண்டும்'

 'களப்பணியை தொய்வின்றி தொடர வேண்டும்'

 'களப்பணியை தொய்வின்றி தொடர வேண்டும்'


ADDED : மார் 13, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''களப்பணி என்பது தேர்தலுக்கு மிகமுக்கியமான ஒன்று.அதை அன்றாடம் தொய்வின்றி தொடர வேண்டும். எச்சூழலிலும் விட்டுவிடக்கூடாது,'' என்று கர்நாடக மாநிலமுன்னாள் எம்.எல்.ஏ., மாருதி ராவ்பவார் கூறினார்.

கோவை பீளமேட்டிலுள்ள பா.ஜ.,அலுவலகத்தில் சிங்காநல்லுார் தொகுதி சட்டசபை மையக்குழு கூட்டம் நேற்று இரவு நடந்தது.

இதில் மாருதிராவ் பவார் பேசியதாவது:

கோவை சிங்காநல்லுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளராக கட்சி தலைமையால் நான்நியமிக்கப்பட்டுள்ளேன். இத் தொகுதியில் ஐந்து மண்டல்கள், 21 வார்டுகள் உள்ளன.

அதில், 358 பூத்கள் உள்ளன. மூன்று பூத்துக்கு ஒரு சக்திகேந்திர பொறுப்பாளர்கள் வீதம் மொத்தம், 106 பொறுப்பாளர்கள் உள்ளனர்.

இவர்களே தேர்தலுக்கான முன்கள பணியாளர்களாக உள்ளனர்.

உங்களோடு தான் நானும் நம் வேட்பாளரும்சிங்காநல்லுார் தொகுதிவாக்காளர்களை நேரில் சந்திக்க செல்லப்போகிறோம்.ஒவ்வொரு வாக்காளர்களையும் கேந்திர பொறுப்பாளர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்,

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு கலந்துரையாட வேண்டும். தொகுதி மக்களின் பொதுவசதிகள் பொது தேவைகள், வேண்டுகோள்கள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அப்படிசெய்யாத பட்சத்தில் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

களப்பணி என்பது தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றுஅதை அன்றாடம் தொய்வின்றி தொடர வேண்டும்.

அது எந்த சூழலிலும் விட்டுவிடக்கூடாது அதுதான் நாம் வெற்றிபெறுவதற்கு வழிவகை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பா.ஜ.,தேசிய மொழிப்பிரிவு மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன், பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us