ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
ADDED : மார் 17, 2026 06:20 AM

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 5வது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் 30.1 ஓவரில் 103 ரன் எடுத்தனர். எதிரணியின் கணேஷ்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
எம்.எம்., கிரிக்கெட் கிளப் அணியினர் 14.4 ஓவரில் 104 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். மார்வெல் கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 197 ரன் எடுத்தனர்.
எதிரணியின் பிரசாந்த் 5 விக்கெட் எடுத்தார். கே.எப்.சி.சி., அணியினர் 20 ஓவரில் 203 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் 45.4 ஓவரில் 162 ரன் எடுத்தனர். தம்பி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணியினர் 47.1 ஓவரில் 165 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 199 ரன் எடுத்தனர். எதிரணியின் ரகுராம் மூன்று விக்கெட் வீழ்த்தினார். கோவை புளூ நைட்ஸ் அணியினர் 36.4 ஓவரில் 203 ரன் எடுத்த வெற்றி பெற்றனர்.
ஆறாவது டிவிஷன் போட்டியில், மான்செஸ்டர் ஸ்டிரைக்கர்ஸ் அணியினர் 41 ஓவரில் 141 ரன் எடுத்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியினர் 44.2 ஓவரில் 142 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
