/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; 125 ரன்கள் அடித்த 'சன் ஸ்டார்' வீரர்
/
ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; 125 ரன்கள் அடித்த 'சன் ஸ்டார்' வீரர்
ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; 125 ரன்கள் அடித்த 'சன் ஸ்டார்' வீரர்
ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; 125 ரன்கள் அடித்த 'சன் ஸ்டார்' வீரர்
ADDED : ஜூன் 09, 2025 11:08 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டிகள் விஜய் ஐ.சி.எஸ்., உட்பட பல்வேறு இடங்களில் நடக்கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியும், எம்.எம்., சி.சி., அணியும் மோதின.
பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியினர், 41.3 ஓவரில், 167 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் பிரதீக், 39 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர்களான வினோத்குமார் நான்கு விக்கெட்களும், ராஜா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய, எம்.எம்., சி.சி., அணியினர், 32.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 168 ரன்கள் எடுத்தனர். வீரர்களான சிவக்குமார், 57 ரன்களும், ராம்பிரகாஷ், 51 ரன்களும் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஐந்தாவது டிவிஷன் போட்டியில், சன் ஸ்டார் அணியும், ஷீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணியினர், 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 319 ரன்கள் எடுத்தனர்.
வீரர் லக்ஷிமிகாந்த், 125 ரன்களும், கார்த்திக், 86 ரன்களும், குணசேகரன், 30 ரன்களும் விளாசினர். எதிரணி வீரர் ஜெரிஷ் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஷீஹாக்ஸ் அணியினரோ, 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 192 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் காளிங்கராஜ், 52 ரன்களும், ஹரிஷ், 31 ரன்களும் எடுத்தனர்.