/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாவது 'கிட்ஸ் லீக் கோ - கோ'; பள்ளி மாணவியர் அபார ஆட்டம்
/
ஐந்தாவது 'கிட்ஸ் லீக் கோ - கோ'; பள்ளி மாணவியர் அபார ஆட்டம்
ஐந்தாவது 'கிட்ஸ் லீக் கோ - கோ'; பள்ளி மாணவியர் அபார ஆட்டம்
ஐந்தாவது 'கிட்ஸ் லீக் கோ - கோ'; பள்ளி மாணவியர் அபார ஆட்டம்
ADDED : பிப் 05, 2025 12:50 AM
கோவை; தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில், மாணவியருக்கான ஐந்தாம் ஆண்டு 'கிட்ஸ் லீக் கோ-கோ' போட்டி, தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி மைதானத்தில் இரு நாட்கள் நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த வீராங்கனைகள், துடிப்புடன் விளையாடினர்.
முடிவில், 12 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான பிரிவில், விவேக் வித்யாலயா பள்ளி, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி, பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி, சுகுணா சர்வதேச பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்து அசத்தின.
தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், விவேக் வித்யாலயா பள்ளி, டி.என்.ஜி.ஆர்., பள்ளி, சுகுணா சர்வதேச பள்ளி, பி.எம்.ஜி., பள்ளி அணிகளும் முதல் நான்கு இடங்களை பிடித்தன.
12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 'பெஸ்ட் அட்டேக்கர்' விருது ரித்திகாவுக்கும், 'பெஸ்ட் டிபெண்டர்' விருது சாய் மிதாவுக்கும், 'ஆல் ரவுண்டர்' விருது கருணாம்பிகைக்கும் வழங்கப்பட்டது.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 'பெஸ்ட் அட்டேக்கர்' விருது ஹரினிக்கும், 'பெஸ்ட் டிபெண்டர்' விருது ஓவிய வர்ஷினிக்கும், 'ஆல் ரவுண்டர்' விருது அபிநந்தனாவுக்கும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி தலைமையாசிரியர் சதாசிவன் உள்ளிட்டோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.