/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்ட குழாயில் உடைப்பு
/
அத்திக்கடவு திட்ட குழாயில் உடைப்பு
ADDED : நவ 07, 2024 12:13 AM

அன்னுார்; அத்திக்கடவு திட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1045 குளம் குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது.
கடந்த 2ம் தேதி அன்னுார் சத்தி ரோட்டில் சந்தையூர் பிரிவு அருகே அத்திக்கடவு பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஐந்து நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் வெளியேறும் தண்ணீர் செல்லனுார் பிரிவு வரை வாய்க்கால் போல் தேங்கி நிற்கிறது. 5 ஏக்கர் பரப்பில் குளம் போல் அருகில் உள்ள தோட்டங்களிலும் தண்ணீர் நிற்கிறது.
இதேபோல் அன்னுார் அவிநாசி சாலையில் கஞ்சப்பள்ளி பிரிவிலும் இரண்டு நாட்களாக பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பள்ளத்தில் செல்கிறது.