/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்டகுழாய் உடைப்பு
/
அத்திக்கடவு திட்டகுழாய் உடைப்பு
ADDED : ஜன 02, 2024 11:23 PM
அன்னுார்:அன்னுார் அருகே ஆலாம்பாளையத்தில் அத்திக்கடவு திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில், 228 குளம், குட்டைகள் உள்ளன. அன்னுார் பேரூராட்சியில், ஆலாம்பாளையத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏற்கனவே ஐந்து முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இங்கு 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் 6வது முறையாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது குளத்துக்கு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் அதிலிருந்து வெளியேறி பள்ளத்தில் சென்றது.
இதுகுறித்து அத்திக்கடவு திட்ட அதிகாரிகளுக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.