தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண் பதிவிறக்கத்தை தடுக்கும் 'பைல் லோடு டெஸ்ட்'

 மண் பதிவிறக்கத்தை தடுக்கும் 'பைல் லோடு டெஸ்ட்'

 மண் பதிவிறக்கத்தை தடுக்கும் 'பைல் லோடு டெஸ்ட்'


ADDED : ஜன 31, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ ட்டின் ஆயுளை உறுதி செய்வது அடித்தளம்தான். வலிமையான அடித்தளம் அமைக்க 'பைல்' முறை கையாளப்படுகிறது. துளையிடப்பட்ட 'பைல்' தன் மேல் உள்ள மொத்த பளுவையும், அதன் அடியிலுள்ள கடினமான அடித்தளத்திற்கு மாற்றுகிறது.

கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மண் தொழில்நுட்ப துறை தலைவர் அருமைராஜ் கூறியதாவது...

ஆழத்தில் கடினமான மண் அல்லது பாறை இருக்கும் பட்சத்தில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சுத்தியல் அடிக்கும்போது அதிகமான சத்தம் வருவதால் குடியிருப்பு பகுதிகளில் அதிகமான அதிர்வு ஏற்படுகிறது. நெருக்கமாக கட்டடங்கள் உள்ள பகுதிகளில் இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

கள வார்ப்பு கான்கிரீட், போர்டு பைலாக போடப்படுகிறது. இன்ஜினியர் வடிவமைத்த ஆழத்திற்கு இயந்திரம் வாயிலாக துளையிடப்பட்டு, பக்கவாட்டை பென்டனைட் குழம்பு வாயிலாக உறுதிப்படுத்தியபின், வடிவமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் உள்ளே செலுத்தப்பட்டு அதன்பின் குறிப்பிட்ட கிரேட் கான்கிரீட் ஊற்றப்படுகிறது.

இது ஒற்றை குவியல் துாணாக அல்லது குவியல் துண்டுகளாக போடப்படுகிறது. பைல் குழுவில் உள்ள பைலின் எண்ணிக்கை கட்டடத்தின் வாயிலாக வரும் பளு மற்றும் மண்ணின் தன்மையை பொறுத்து வடிவமைக்கப்படுகிறது.

அதன்பின் 'பைல் கேப்' போடப்பட்டு அதன்மீது கட்டடத்தின் துாண்கள் எழுப்பப்படுகின்றன. சுமையை மண்ணிற்கு கடத்துவதின் தன்மையை பொறுத்து முனைத்தாங்கி நிலத்துாண்(எண்ட் பேரிங் பைல்) மற்றும் உராய்வு நிலத்துாண் என்று அழைக்கப்படுகிறது.

இந்த முறை பல சிறப்பு அம்சங்களை கொண்டது. மண்ணின் பதிவிறக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தும். மிக அதிக பளு தாங்கும் திறன் கொண்டது. தண்ணீருக்கு அடியே சிறப்பாக செயல்படுத்தப்படக்கூடியது.

தண்ணீருக்கு அடியில் பைல் பவுண்டேசன் போடும்போது அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மண் ஆய்வு மற்ற பரிசோதனை மற்றும் பைலின் தாங்கும் திறனையும் நிர்ணயிப்பதற்கு மிகுந்த கவனம் வேண்டும்.

அதற்கான வல்லுனர்களை அணுகி வடிவமைப்பை பெற்றுக்கொள்வது தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பதற்கும், கட்டடத்தின் நீடித்த ஆயுளை பெறுவதற்கும் பயன்படும். கட்டடங்களுக்கான நிலத்துாண் அடிமானம் BIS 2911-2010(BIS Code) என்ற கோடு பயன்படுத்தி வடிவமைக்கப்படுகிறது.

மேலும், இவ்வகையான அடிமானம் போடும்போது பைல் தாங்கும் திறனை அடிமானம் அமைத்தபின் பிரத்யேக 'பைல் லோடு டெஸ்ட்' வாயிலாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். இந்த சோதனை மிகப்பெரிய கட்டடங்களுக்கு, பாலங்கள் போன்ற கட்டுமான பணிகளிலும் தவிர்க்க முடியாதது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us