/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது வேட்பாளருடன் நால்வருக்கு மட்டுமே அனுமதி
/
வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது வேட்பாளருடன் நால்வருக்கு மட்டுமே அனுமதி
வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது வேட்பாளருடன் நால்வருக்கு மட்டுமே அனுமதி
வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது வேட்பாளருடன் நால்வருக்கு மட்டுமே அனுமதி
ADDED : மார் 20, 2024 12:50 AM

கோவை;லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்புவோர், இன்று (20ம் தேதி) முதல், 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
கோவை லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை, இன்று காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.
போட்டியிட விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
கூடுதலாக, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபியிடம், வேட்பு மனு தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இவரிடம் மனு தாக்கல் செய்ய, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
வரும், 23ம் தேதி (சனிக்கிழமை), 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர்த்து, 27ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்பவருடன், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு இலவசம்; மனு தாக்கல் செய்யும்போது, 'டிபாசிட்' தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
எஸ்.சி.,/ எஸ்.டி., இனத்தை சேர்ந்தவர்கள், 12 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தினால் போதும். பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு பெற்றால் மட்டுமே, வேட்பாளர்கள் தங்களது 'டிபாசிட்' தொகையை, திரும்ப பெற முடியும்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., ஷர்மிளா அலுவலகத்தில் வேட்பு மனு கொடுக்கலாம்.
அல்லது, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான சப்-கலெக்டர் சரண்யாவிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

