/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதிக்குழு மானியம் ரூ.4.22 கோடி விடுவிப்பு
/
நிதிக்குழு மானியம் ரூ.4.22 கோடி விடுவிப்பு
ADDED : நவ 18, 2025 03:20 AM
அன்னுார்: கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பிறப்பித்துள்ள உத்தரவு:
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 228 ஊராட்சிகளுக்கு, மக்கள் தொகை மற்றும் குறைந்தபட்ச மானியம் என்கிற விகிதத்தில் மாநில நிதி குழு மானியத்தில் இருந்து நான்கு கோடியே 22 லட்சத்து 43 ஆயிரத்து 940 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு, 39 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயும், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு, 13 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காரமடை ஒன்றியத்திற்கு, 57 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு, 34 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயும், சூலூர் ஒன்றியத்துக்கு, 44, லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும், சுல்தான் பேட்டை ஒன்றியத்துக்கு, 36 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும், என 12 ஒன்றியங்களுக்கு, நான்கு கோடியே 22 லட்சத்து 43 ஆயிரத்து 940 ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

