/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் 19 கழிவறை கட்ட நிதியுதவி
/
அரசு கல்லுாரியில் 19 கழிவறை கட்ட நிதியுதவி
ADDED : பிப் 17, 2024 02:21 AM
கோவை:எம்ரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., சமூக பொறுப்பு நிதியின் கீழ், கோவை அரசு கலை கல்லுாரியில், கழிவறைகள் கட்டப்படவுள்ளன.
சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 19 கழிவறைகள் கட்டப்படவுள்ளன கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., தலைவர் சீனிவாசன் ஆகியோர், புதிய கழிப்பறை கட்டடத்திற்கு, அடிக்கல் நாட்டினர்.
இதன் பின் சீனிவாசன் பேசுகையில், '' மாணவர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்று, வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். எந்த துறையில் இருந்தாலும், சமூக பணியாற்ற முன்வர வேண்டும்,'' என்றார். கல்லுாரியின் முதல்வர் உலகி, எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனம் மற்றும் கிரிஷா அறக்கட்டளை நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.