/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் இறந்தவர் வீட்டு கடனை ரத்து செய்ய நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
/
விபத்தில் இறந்தவர் வீட்டு கடனை ரத்து செய்ய நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
விபத்தில் இறந்தவர் வீட்டு கடனை ரத்து செய்ய நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
விபத்தில் இறந்தவர் வீட்டு கடனை ரத்து செய்ய நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : டிச 15, 2024 11:56 PM
கோவை; வீட்டு கடன் வாங்கியவர் விபத்தில் இறந்து விட்டதால், கடன் நிலுவை தொகையை ரத்து செய்ய, நிதி நிறுவனத்துக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, குனியமுத்துாரை சேர்ந்த சோமசுந்தரம்,57, அவிநாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பிலுள்ள, 'பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தில், 15.74 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினார்.
இதற்கு, ஒரு முறை இன்சூரன்ஸ் பிரீமிய தொகை 74,359 ரூபாய், நிதி நிறுவனத்தினர் பிடித்தம் செய்தனர். கடனுக்கான தவணை தொகை, 22,530 ரூபாயை மாதந்தோறும் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் சோமசுந்தரம், 2023ல் சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர் இன்சூரன்ஸ் செய்து இருந்ததால், கடன் நிலுவை தொகையை முடித்துக் கொள்ள, கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பத்திரத்தை திருப்பித் தருமாறு, அவரது மனைவி கிருஷ்ணவேணி விண்ணப்பித்தார்.
இறப்பு சான்றிதழ், விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் அளித்தார். ஆனால், நிதி நிறுவனம் மறுத்தது. மீதி தவணை தொகையினை செலுத்துமாறு, குடும்பத்தினரை வற்புறுத்தி வந்தனர்.
இதனால், கணவர் செலுத்த வேண்டிய கடன் தவணையை ரத்து செய்து, இழப்பீடு வழங்க கோரி, அவரது மனைவி கிருஷ்ணவேனி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கடன் தவணையை ரத்து செய்து, அடமான பத்திரத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக,25,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.