/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைனான்சியர் தற்கொலை வழக்கு; இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை
/
பைனான்சியர் தற்கொலை வழக்கு; இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை
பைனான்சியர் தற்கொலை வழக்கு; இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை
பைனான்சியர் தற்கொலை வழக்கு; இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை
ADDED : டிச 07, 2024 06:31 AM
கோவை; பைனான்சியர் தற்கொலை வழக்கில், இருவருக்கு தலா ஏழாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, வடவள்ளி, பொம்மன்னம்பாளையத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜெயகிருஷ்ணன், வடவள்ளி, தில்லை நகரை சேர்ந்த மணி,54, ஜெயா நகரை சேர்ந்த தர்மராஜ்,71, ஆகியோரிடம், வட்டிக்கு பணம் பெற்று, பைனான்ஸ் தொழில் செய்தார்.
இந்நிலையில், இருவரிடம் வாங்கிய பணம் மற்றும் வட்டியை திருப்பி கொடுக்காமல், ஜெயகிருஷ்ணன் காலம் தாழ்த்தி வந்தார். பணத்தை திருப்பி தராவிட்டால் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாகவும், ஜெயகிருஷ்ணனின் மகனை வைத்து பணம் வசூலிப்போம் என்றும் இருவரும் சேர்ந்து மிரட்டினர்.
இதனால் பயந்து போன ஜெயகிருஷ்ணன், கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த 2014, அக்., 14 ல், விஷம் குடித்து தற்கொலை செய்தார். வடவள்ளி போலீசார் விசாரித்து, மணி, தர்மராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி தமயந்தி, குற்றம் சாட்டப்பட்ட மணி, தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஏழாண்டு சிறை, தலா, 2,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.