/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டூர் பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம்
/
காட்டூர் பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம்
ADDED : செப் 24, 2024 11:55 PM
மேட்டுப்பாளையம் : காட்டூர் பகுதியில் குப்பைகள் கொட்ட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில், காட்டூர் நகராட்சி கழிப்பிடம் அருகே, குப்பைகளை மக்கள் கொட்டி வந்தனர். இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நகராட்சித் தலைவர் மெஹரிபா பர்வீன், நகராட்சி கமிஷனர் அமுதா, சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில், துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து, அந்த இடத்தில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தனர். பின்பு இங்கு யாரும் குப்பைகள் கொட்டாமல் இருக்க, வண்ணக் கோலங்கள் போட்டனர்.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இப்பகுதி துாய்மை செய்யப்பட்ட பகுதியாகும். எனவே இங்கு யாரும் குப்பைகள் கொட்ட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.