தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்


ADDED : பிப் 11, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு தோறும் குப்பை சேகரிக்கப்படுகிறது.

வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை, தரம் பிரிக்கபட்டு ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. நகரை துாய்மையாக வைக்க, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகரை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பையை வீதியில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். வீதியில் குப்பையை வீசினால், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us