/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வழிப்பாதைகளில் குப்பை கொட்டினால் அபராதம்
/
நீர் வழிப்பாதைகளில் குப்பை கொட்டினால் அபராதம்
ADDED : ஏப் 04, 2025 11:34 PM
சோமனூர்; கிருஷ்ணாபுரம் பகுதியில் நீர் வழிப்பாதைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடு, வீடாக குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் குப்பையை கொடுக்க வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணாபுரம் பகுதியில் நீர்வழி பாதைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க,தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை இரு சக்கரவாகனங்களில் வந்து, குப்பை கொட்டியநபர்களை, பிடித்து நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
நகராட்சி கமிஷனர் பாரதி கூறுகையில், வீடு, வீடாக குப்பை சேகரிக்க வரும் பணியாளரிடம் குப்பையை கொடுக்க வேண்டும். பொது இடங்களில் கொட்டக் கூடாது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.

