/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்
/
15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்
15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்
15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்
ADDED : ஏப் 21, 2025 06:53 AM
மேட்டுப்பாளையம் : 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள், உறுப்பினர்களாக உள்ளனர். இதன்படி இக்குழுவினர் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆய்வின் போது தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால், அவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
----