/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்கவாட்டில் தடுப்பு அமைக்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்
/
பக்கவாட்டில் தடுப்பு அமைக்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்
பக்கவாட்டில் தடுப்பு அமைக்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்
பக்கவாட்டில் தடுப்பு அமைக்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்
ADDED : ஏப் 16, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பக்கவாட்டில் தடுப்பு அமைக்காத, தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பஸ் சக்கரங்களில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதை தடுக்க, அரசு பஸ்களின் இரு புறமும் பக்கவாட்டில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தனியார் பஸ்களிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என, போலீசார் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தனியார் பஸ்களில் இந்த தடுப்பு பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க, நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தடுப்பு அமைக்காமல் இயங்கிய, 35 பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.