ADDED : ஆக 03, 2025 09:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சங்கர் நகர் பகுதியில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதில் கார், வேன் போன்ற பழைய வாகனங்களை நிறுத்தி வைக்கும் கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், போலீசார் உதவியுடன் தீயை அணைத்தனர். இதில் சில பழைய கார்கள் எரிந்தன, அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ---