தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெர்மோகோல் நிறுவனத்தில் தீ

தெர்மோகோல் நிறுவனத்தில் தீ

தெர்மோகோல் நிறுவனத்தில் தீ


ADDED : பிப் 01, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில், காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. நான்கு பேர் பணிபுரிகின்றனர்.மதிய உணவுக்காக வெளியில் சென்றிருந்தனர்.

மதியம், 1:30 மணியளவில், நிறுவனத்திலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து அங்கிருந்த தெர்மாகோல்கள் எரிந்தன.

அதிக புகை வெளியேறியதால், அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறினர்.

தகவல் அறிந்து கணபதி, தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ஆவணங்கள் முறையாக உள்ளதா என விசாரணை நடக்கிறது. குடியிருப்பு பகுதியில், இதுபோன்ற

நிறுவனங்கள் செயல்படக்கூடாது.

மாநகராட்சியில் வேறு எங்காவது இது போன்ற நிறுவனங்கள் செயல்படுகிறதா என ஆய்வு நடத்தப்படும்,'' என்றார்.

மேலும் இரு தெர்மொகோல் நிறுவனங்கள் அதே பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை அகற்ற வேண்டும்

எனவும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us