/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பைபர்' பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
/
'பைபர்' பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
'பைபர்' பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
'பைபர்' பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
ADDED : மே 13, 2025 11:51 PM
கோவை; ஆவாரம்பாளையம் பகுதியில், 'பைபர்' பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
ஆவாரம்பாளையம் மேம்பாலத்திற்கு கீழ், தாவுத் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இங்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும், பைபர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. பைபர் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பறவியது.
அதைப் பார்த்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வருவதற்குள் தீ அருகில் உள்ள கடைக்கு பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.