/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் எண்ணெய் மில்லில் தீ விபத்து: தனியார் எண்ணெய் மில்லில் தீ விபத்து

ADDED : செப் 29, 2025 10:25 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, நஞ்சேகவுண்டன்புதுாரில் தனியார் எண்ணெய் மில் உள்ளது. இங்கு, தென்னை நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சென்று, இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அதில், எண்ணெய் தயாரிப்புக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரை எரிந்து சேதமானது. மின்கசிவால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம், என, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.