UPDATED : நவ 01, 2026 06:20 PM
ADDED : நவ 01, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி – கோவை ரோடு, சி.டி.சி., மேட்டில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில், கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் பிரிவில் ஹீட்டரில், திடீரென அதிகளவு வெப்பம் ஏற்பட்டு, தீ பிடித்தது.
இது குறித்து அங்கு இருந்தோர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புக்குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
