/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
98 ஆண்டுகள் பழமையான குடியிருப்பில் தீ விபத்து
/
98 ஆண்டுகள் பழமையான குடியிருப்பில் தீ விபத்து
ADDED : ஜூலை 09, 2025 10:09 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே, பழமையான குடியிருப்பில் தீ பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை தெற்கு தெருவில், கடந்த, 1927ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான வீடு உள்ளது. 98 ஆண்டுகள் பழமையான வீட்டில், பன்னீர் செல்வம் என்பவர், குடும்பத்துடன் வசிக்கிறார்.
நேற்று காலை, வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் ஆன் செய்து விட்டு, கடைக்கு சென்று வருவதற்குள் வீட்டின் மாடியில் தீ பற்றி எரிந்தது.அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது.
இது குறித்து, அருகே வசிப்போர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேர போராடத்துக்கு பின், தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்தது. இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.