ADDED : ஜூலை 18, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் நேற்று அதிகாலை, பழக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜான்சா என்பவர், கருப்ப கவுண்டர் வீதியில் பழக்கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில், கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தெற்கு தீயணைப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், இரண்டு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து சென்ற, 10க்கும் மேற்பட்ட வீரர்கள், மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். கடையில் இருந்த பழங்கள் எரிந்து சேதமடைந்தனு. பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கின்றனர்.