ADDED : ஏப் 18, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: கோவை, செட்டிபாளையம் சாலையில் ஶ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவு நீர் பண்ணை உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை கழிவு கொட்டப்படுகிது.
ஏப்ரல் 17 ஆம் தேதி இரவு, 10:45 மணியளவில் இக்கழிவின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்தது. சுற்றுப் பகுதி முழுவதும் புகை பரவியதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். தீயணைப்பு துறையினர் அதிகாலை, 3:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.
இதனையறிந்த கிணத்துகடவு தொகுதி தி.மு.க.வேட்பாளர் நள்ளிரவே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். கோடை வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதால், தீ பிடிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.
