ADDED : செப் 14, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் யாசர், 35. இவர் ஊட்டி சாலையில், பழைய இரும்பு குடோன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை குடோனின் வெளிப்பகுதியில், காஸ் கட்டர் வைத்து பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ பிடித்தது. அருகில் உள்ளவர்கள், கடையில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் அருகில் இருந்த ஆழ்குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எனினும், குடோன் வெளியே வைத்திருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.