ADDED : மார் 10, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது; வாகன உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், தாலுகா அலுவலகம் அருகே தஸ்லீம், 54 என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் உள்ளது. நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த நிஜாமுதீனுக்கு சொந்தமான இரும்பு குடோனிலும் பரவியது.
குடோன்களில் தீ விபத்து ஏற்பட்டதில், அதிலிருந்து, பழைய வாகனங்களின் சக்கரங்கள், சீட்டுகள் உட்பட உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின. மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-
