ADDED : ஜூலை 31, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது காமாட்சி புரம். இங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. நேற்று காலை, குப்பைக்கு சில நபர்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதனால், தீ மள மளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. கரும்புகையும் எழுந்ததால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.