/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பி உரசி தீ விபத்து: வைக்கோல் எரிந்து நாசம்
/
மின்கம்பி உரசி தீ விபத்து: வைக்கோல் எரிந்து நாசம்
ADDED : நவ 06, 2025 11:21 PM

ஆனைமலை: ஆனைமலை பெத்தநாயக்கனுார் ரோட்டில், அய்யாமடை அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு லாரி மின் கம்பியில் உரசி தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை பெத்தநாயக்கனுார் ரோடு அய்யாமடை சின்ராஜ் என்பவரது வயலில், அறுவடை பணிகள் முடிந்து, நெல் மூட்டையாக கட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இருந்த வைக்கோல்கள், பொள்ளாச்சியை சேர்ந்த வியாபாரி கொள்முதல் செய்தார். இதை, 40 கட்டுகளாக கட்டி சரக்கு லாரியில் ஏற்றினர். லாரியை பெரியபோதுவை சேர்ந்த ஆனந்தகுமார், 35 என்பவர் ஓட்டினார்.
அப்போது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப்பற்றியது. இதைக்கண்ட லாரியில் இருந்த நான்கு தொழிலாளர்கள், டிரைவர் ஆனந்தகுமார் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

