/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் சிறப்பு முகாம் நிறைவு
/
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் சிறப்பு முகாம் நிறைவு
ADDED : நவ 06, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்றுடன் முடிந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை மாதம் துவங்கி, ஒவ்வொரு கட்டமாக ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று கடைசி முகாமாக (6ம் தேதி) பெரியகளந்தையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பெரியகளந்தை, மன்றாம், மெட்டுவாவி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு நடந்தது.
முகாமில், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும், ஆதார் சேவை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். இதில், 134 மனுக்களை பயனாளிகள் வழங்கினர்.

