/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாங்க கற்றுக்கொள்ளலாம்' : தீயணைப்புத்துறை விழிப்புணர்வு
/
'வாங்க கற்றுக்கொள்ளலாம்' : தீயணைப்புத்துறை விழிப்புணர்வு
'வாங்க கற்றுக்கொள்ளலாம்' : தீயணைப்புத்துறை விழிப்புணர்வு
'வாங்க கற்றுக்கொள்ளலாம்' : தீயணைப்புத்துறை விழிப்புணர்வு
ADDED : அக் 16, 2025 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பொதுமக்களுக்கு 'வாங்க கற்றுக்கொள்ளலாம்' என்ற தலைப்பின் கீழ், தீயணைப்பு துறையின் செயல்பாடுகள், தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள், எதிர்பாராத இடர்பாடுகளில், தங்களையும், தங்களைச்சார்ந்த நபர்களையும் பாதுகாக்கும் முறைகள் குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம், நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.
இரு நாட்கள் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.